தமிழகம்

2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் விவரம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சட்டப்பேரவையில் இன்று தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  2021 – 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை  தாக்கல் செய்கிறார்.

  • 2021 – 2022 ஆம் நிதியாண்டிற்கு இடைக்கால வரவு – செலவு திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 1,738.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். 12,000 பேருந்துகளில் 2,000 பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும். முதல் கட்டத்தில் 2,200 பிஎஸ் 6 பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.  
  • பயிர்க்கடன் தள்ளுபடிக்காக இடைக்கால வரவு – செலவு திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • தமிழக சுகாதாரத்துறைக்கு ரூபாய் 19,420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறைக்கு ரூபாய் 7,217 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூபாய் 688.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தீயணைப்புத்துறைக்கு ரூபாய் 436.68 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூபாய் 22,218.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • காவல்துறை வரவு – செலவு திட்ட நிதி, 2021 – 2022 ஆம் ஆண்டு இடைக்கால வரவு – செலவு திட்ட மதிப்பீடுகளில் 9,567.93 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும்.  உயர்கல்வித்துறைக்கு ரூபாய் 5,478 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக ரூபாய் 1,932.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு ரூபாய் 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கோவிட்-19 பெருந்தோற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி ரூபாய் ஒதுக்கீடு. புதிய நீதிமன்ற கட்டடங்களைக் கட்ட ரூபாய் 289.78 கோடி உட்பட நீதித்துறைக்கு ரூபாய் 1,437.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • மீன்வளத்துறைக்கான மூலதன செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் ரூபாய் 580.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வள ஆதார திட்டங்களுக்காக ரூபாய் 6,453.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வேளாண்துறைக்கு ரூபாய் 11,982.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்காக (ஊரகம்) ரூபாய் 3,548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்காக (நகர்ப்புறம்) ரூபாய் 3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திற்கு ரூபாய் 2,350 கோடி, அம்ருத் திட்டத்திற்கு ரூபாய் 1,450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் 229.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்காக ரூபாய் 13,967.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூபாய் 2,634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழக கைத்தறித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் 1,224.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்துக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் 1,953.98 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ALSO READ  மருத்துவமனையில் கொரோனா கவச உடையில் நடந்த திருமணம் !

இந்நிலையில் தமிழகத்தின் கடன் மதிப்பு ரூபாய் 5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ப்ளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம்- தமிழக அரசு… 

naveen santhakumar

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்துவதில் சிக்கல் !

News Editor

பிறந்த குழந்தையை கடித்து குதறிய நாய்கள்

Admin