தமிழகம்

காலையிலேயே கலைகட்டும் டாஸ்மார்க்; கட்டுப்பாடுகளால் குவியும் மது பிரியர்கள் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்  நிலையில் இதனை தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்திருந்தது.

அந்த வகையில், இன்று முதல் 06/05/2021 பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு அமல்படுத்தப்பட்டது. அதில் ஒன்பது மணி நேரங்கள் செயல்பட்டுவந்த டாஸ்மாக் கடைகள் இனி நான்கு மணி நேரங்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக 12 மணியிலிருந்து இரவு 9 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கும் ஆனால் இன்று முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே  இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மது பிரியர்கள் காலை 8மணி முதலே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்குவதற்காக வரிசையில் நிற்க தொடங்கிவிட்டனர்.மேலும்  டாஸ்மாக் ஊழியர்களால் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகின்றனர், அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்படுகிறது.

ALSO READ  அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அதிரடி உத்தரவு!

டோக்கன் பெற்றுக் கொண்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த டோக்கன் முறையானது 1 மணிநேரத்திற்கு 50 லிருந்து 100 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேன்மொழி பி.ஏ. சீரியலின் துணை நடிகர் வெட்டிக்கொலை :

naveen santhakumar

கொரோனா முன்னெச்சரிக்கையை தவிர்க்கும் சென்னை மக்கள் – ட்விட்டரில் அஸ்வின்‌ வேதனை

naveen santhakumar

1 -12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

naveen santhakumar