தமிழகம்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தேநீர் மூலிகை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இதில் தமிழகத்தில் நாள்தோரும் நோய் தொற்று எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவத் துறையினர், காவல்துறையினர்  24 மணி நேரமும் முன் களப்பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில் நாள்தோறும் வெயில் மழை என்று பாராமல் காவல் பணியில் உள்ள காவலர்கள் தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு மக்களை பாதுகாத்து வரும் அவரகளுக்கு இயற்கை மூலிகை மூலம் சித்த மருத்துவத்தின் மூலம் தயார் செய்யப்பட்ட மூலிகை தேநீரை வழங நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை இன்று பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் பெரியகுளம் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என அனைவருக்கும் சமூக இடைவெளி விட்டு அமர வைத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாலர் சாய்சரண் தேஜஸ்வி மூலிகை தேநீரை அவரே வழங்கி காவலர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் காவலர்கள் நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதோடு உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க முகக்கவசம் அணிந்தும், அடிக்கடி கைகளை தூய்மை செய்தும் பாதுகாப்புடன் இருக்க அறிவுருத்தினார். 

ALSO READ  உலக சாதனை படைத்த "கே.ஜி.எப் 2" டீசர் !

மேலும் தமிழக அரசின் சித்த மருத்துவ துறையின் மூலம் தயார் செய்யப்படும் மூலிகை தேநீர் பொடியை காவலர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து முன் களப்பணியாளர்களாக பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி பொருட்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்… மக்கள் எதிர்ப்பால் யாரும் இன்றி அவசர அவசரமாக புதைக்கப்பட்ட அவலம்…!

naveen santhakumar

10 ரூபாய் கட்டணத்தில் சென்னையை சுற்றி பார்க்க சுற்றுலாத் துறை அறிவிப்பு

Admin

காவல் துறை தாக்கியதில் உயிரிழந்த வியாபாரி குடும்பத்துக்கு இழப்பீடு வேண்டும் – டிடிவி தினகரன்..!

News Editor