தமிழகம்

கோவில் திருவிழாக்களை கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும்; கிராமிய கலைஞர்கள் மனு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவில் திருவிழாக்களை கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும் என கிராமிய கலைஞர்கள் மேள தாளங்கள் முழங்கி ஊர்வலமாக வந்து ஆட்சியரிடம் மனு.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் கோவில் திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உத்தமபாளையம் தாலுகா கலைவாணி கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக நூற்றுக்கு மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் மதுரை சாலையில் இருந்து மேள தாள வாத்தியங்கள் முழங்கியவாறு ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் கோவில் திருவிழாக்களை கட்டுப்பாட்டுடன் நடத்தி வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் கோவில் திருவிழாக்களை தவிர்த்து கிராமப் மரங்களில் உள்ள சிறிய கோவில்களில் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்க வேண்டும். மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு மாதந்தோறும் 10 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரி கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தினர் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


Share
ALSO READ  குஜராத் சபர்மதி ஆற்றில் வீரியமிக்க கொரோனா வைரஸ்- மூன்றாம் அலை தண்ணீர் மூலமா?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5% ஒதுக்கீடு கோரி மனு

Admin

தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!

Admin

தமிழகத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி:

naveen santhakumar