தமிழகம்

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையத்தை பார்வையிட்ட பாஜகவினர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கரூர் அடுத்த தளவாபாளையம் பகுதியில் அமைந்துள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடந்து முடிந்த 2011 சட்டசபை பொதுத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள, கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட நான்கு சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு பெட்டிகள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் தேர்தல் ஆணையமும், போலீசார், ராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக கட்சியை சார்ந்த மாநில துணை தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். ஆகையால், கரூர் மாவட்ட பாஜக கட்சியின் மாவட்ட தலைவர் கே.சிவசாமி தலைமையில்., பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியான அதிமுக நிர்வாகிகளும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியின் பாதுகாப்பு, வாக்கு எண்ணும் போது தற்போது வரை 10 டேபிள்கள் தான் போடப்படும் நிலையில், கொரோனா தொற்று ஆங்காங்கே சமூக இடைவெளி வேண்டும் என்பதினால் 14 டேபிள்கள் போட்டு எண்ண வேண்டுமென்றும் தேர்தல் ஆணையத்திற்கு மனுக்களாக கொடுக்கப்பட்டது


Share
ALSO READ  தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலக பட்டினி தினம்; ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் !

News Editor

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைப்பு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு….

naveen santhakumar

அப்படி என்ன சரக்குணே அடிச்ச ..? போதையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர்

News Editor