தமிழகம்

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியத் தொகை… வெளியானது உத்தரவு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மானியத்தொகை கடந்த அக்டோபர் மாதம் ரூ.77.9 கோடியில் 50 சதவீதம் விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்க & நடுநிலைப் பள்ளிகளுக்கான இறுதி கற்பிப்பு மானியம், பராமரிப்பு மானியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும்,

ALSO READ  ஜன.20-க்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள்- அமைச்சர் பொன்முடி..!

மார்ச் 4-ம் தேதிக்குள்ளாக வழங்கி, மார்ச் 15-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மானியம் வழங்கும் முன் பள்ளிகளில் உள்ள பணியிடங்கள், மாணவர் விவரம், கட்டடங்களின் சான்று, சொத்து விவரம் ஆகியவற்றை சரிபார்த்து அதற்கேற்ப மானியம் விடுவிக்க வேண்டும் என்றும், தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு மானியம் தரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கருப்பு பூஞ்சை மருந்து; தமிழகத்திற்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு !

News Editor

சென்னையில் ஆறு கொரோனா ஹாட் ஸ்பாட்ஸ்…

naveen santhakumar

கோவில் உண்டியலில் தொடர் திருட்டு; போலீசார் வலைவீச்சு !

News Editor