தமிழகம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா கட்டுப்பாடுகள்… மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் நகர்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. கொரானா தொற்று 3ம் அலை அதிகமாக பரவி வருவதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என ஒய்வு பெற்ற மருத்துவர் நக்கீரன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னையில் மட்டும் 9 ஆயிரம் தெருக்களில் நோயின் தாக்கம் அதிகரித்து மூடப்பட்டிப்பதால் நகர் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் நோயின் தாக்கம் கூடுதல் ஆகும் என்றும், இதுவரை நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த அறிவிப்பாணை வெளியிடவில்லை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் அரசியல்வாதி இல்லை மக்கள் நலன் கருதும் மருத்துவர் என்பதால் தான் நகர்புற தேர்தலை இந்த சூழலில் நடத்த வேண்டாம் என்கிறோம் என்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நகர்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் முடிக்க கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி தேர்தல் அறிவிப்பை வரும் 26 ம் தேதிக்கு முன்னர் வெளியிட வேண்டியுள்ளதாகவும்
மாநில தேர்தல் ஆணையம்

ALSO READ  கொரோனா நிதியாக 2000 ரூபாய் வழங்கும் பணி துவக்கம் !

தரப்பில் விளக்கம் அளிக்கப்படது. கொரானா பாதுகாப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகர்புற உள்ளாட்சி தேர்த வேட்புமனுக்களை பெறுவதில் இருந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மாநில தேர்தல் ஆணையம், ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலை இதன்படி தான் அரசு நடத்தியது என்பதையும் தெரிவித்தது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் நகர்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். 17 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஐ.சி.யூ. அனுமதியும் அதிகரிக்கிறது – மனுதாரர் நக்கீரன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் ஜனவரி 27க்குள் அறிவிப்பாணை வெளியிட அறிவுறுத்தியுள்ளதே? என கேள்வி எழுப்பிய பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு,

ALSO READ  அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதியை அறிவித்தது

நகர்புற உள்ளாட்சி தேர்தலைக் நடத்த கூடாது என்ற வழக்குகள் வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், நேரடி விசாரணை நடத்தப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியர் கைது

naveen santhakumar

கும்பகோணம் பள்ளி தீ விபத்து- 17ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

naveen santhakumar

ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கி முனையில் பெண்ணின் நகை பறிப்பு: கொள்ளையன் என்கவுண்டர்

naveen santhakumar