தமிழகம்

சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசுவதன் மூலம் மாணவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

தமிழகத்தில் மீண்டும் வருகிற 17 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இரு தினங்களில் கூடுதல் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்ப்படுகிறது. கொரோனா பாதித்த சில மாணவர்கள் தற்போது நல்ல உடல் நலத்துடனே உள்ளனர். மாணவர்கள் இடையே அச்சமற்ற சூழல் உள்ளது. 1முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். 

ALSO READ  27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி…!

கொரோனா சோதனை மாதிரிகளை பெங்களூருக்கு அனுப்பி அதன் உருமாற்றம் குறித்து ஆய்வு செய்ய, ஒரு சோதனைக்கு ரூ.5000 செலவானது. இதனால் தமிழ்நாட்டிலேயே இந்த ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு தற்போது அமைக்கப்பட்டுள்ளது, என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்து 91 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைன் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஏற்பாடு செய்துள்ளது…!!

Admin

சாத்தான்குளம் மரணம்: ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினி ஆறுதல்… 

naveen santhakumar

மோடி பொங்கல் ரத்து…. அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு!

naveen santhakumar