தமிழகம்

தமிழக பட்ஜெட் : 8,930.29 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக காவல்துறைக்கு 8930.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

காவல்துறையை மேம்படுத்த ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு; நிதியமைச்சர் தகவல்..!

இது குறித்து பட்ஜெட்டில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாவது,

நாட்டின் மிகத் திறமையான மற்றும் சிறப்பான காவல் படைகளில் ஒன்றாகத் திகழும் வகையில், தமிழக காவல்துறையின் தரத்தை மீட்டெடுப்பது இந்த அரசின் நோக்கம்.

ALSO READ  வைகை எக்ஸ்பிரசுக்கு 40 வயசாச்சு

மனிதவளம், வாகனங்கள், கருவிகள், ஆயுதங்கள், தளவாடங்கள், கட்டமைப்பு ஆகிய காவல்துறையின் தேவைகளை மாநில அரசு நிறைவு செய்யும், காவல்துறையில் ஒப்பளிக்கப்பட்ட 1, 33,198 பணியிடங்களில், மீதமுள்ள 14, 317 காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், பெரும் குற்றங்களில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள் பொருளாதாரக் குற்றங்களுக்கு உரிய தண்டனைகள் பெற்றுத்தரும் வகையில் விரைவாக விசாரணைகள் மேற்கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். காவல்துறைக்கு மொத்தம் 8.930.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா விழிப்புணர்வு பணியில் 85 வயது முதியவர்..தலைவணங்குகிறோம் ஐயா..

naveen santhakumar

வெள்ளத்தால் மக்கள் அவதி – மின் கட்டணம் கட்ட அவகாசம் தேவை – ஓ.பி.எஸ் ? – அமைச்சர் விளக்கம்!

naveen santhakumar

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை…!

naveen santhakumar