தமிழகம்

தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுமார் 21 ஆயிரத்து 770 பேருக்கு தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்துக்கு மேல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடித்து வரும் நிலையில், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

ALSO READ  கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழக்க நேரிட்டால் 10 லட்சம் நிவாரணம்- தமிழக அரசு...

தமிழ்நாடு முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக சமூக தனிமைப்படுத்துதலை உறுதி செய்ய மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் கீழ், 24.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பொதுமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் 1,778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் ஈட்டுறவு (E.S.I) திட்டத்தின் கீழ், பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்.

ALSO READ  சேலத்தில் காபி பார் உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!

இதற்காக ரூ.2.177 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிவசங்கர் பாபா மிகவும் நல்லவர்; பெண்கள் மீது நாட்டமற்றவர்; இது திட்டமிட்ட சதி: பிரபல நடிகர்..!

naveen santhakumar

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை !  

News Editor

கள்ளக்காதலனுடன் மனைவி தனி அறையில் உற்சாகம்.. வெறிச்செயலில் ஈடுபட்ட கணவன்

Admin