தமிழகம்

மாணவர்களுக்காக புதிய திட்டம்- அகில இந்திய வானொலி…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று முதல் ஒலி வடிவில் அகில இந்திய வானொலியில் பாடங்கள் ஒலிபரப்பப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

Now Odisha turns to radio for classes - The Hindu

கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத் தேர்வு எழுத உள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்களுகாக இன்று முதல் 31ம் தேதி வரை அகில இந்திய வானொலியில் ஒலி வடிவில் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

ALSO READ  நான் அரசியலுக்கு கட்டாயம்  வருவேன் : நடிகர் பார்த்திபன் 

மேலும், கிராமப்புறங்களில் இணைய சேவை குறைவாக உள்ள பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஒலி வடிவிலான பாடங்கள் பயனுள்ளளதாக இருக்கும் என பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் வீதம் 4 பிரிவுகளாக 80 நிமிடங்கள் பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது.

ALSO READ  பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு?

முதல் 20 நிமிடம் 10ம் வகுப்பு பாடங்களும் அடுத்ததாக 3 இருபது நிமிடங்களுக்கு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 வெவ்வேறு பாடங்கள் ஒலி வடிவில் ஒலிபரப்பச் செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

Admin

கனமழை எச்சரிக்கை – 26 மாவட்டங்களுக்கு விடுமுறை!

naveen santhakumar

பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த யூடியூபர்ஸ் மூவர் கைது:

naveen santhakumar