தமிழகம்

#Breaking தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு… அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாட்டில் கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த 23-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு பிறப்பித்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 16ம் தேதி அன்றுஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும்
23-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்; தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும்.கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Share
ALSO READ  75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாணவி மதனா சாதனை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கியது “பறக்கும் திமிங்கலம்” :

naveen santhakumar

“தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

Shanthi

20 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்:

naveen santhakumar