தமிழகம்

கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு !

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாகி வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநிலங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அந்த வகையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில்….

  • திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி.
  • இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. 
  • தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத இருக்கை மட்டுமே செயல்பட வேண்டும்.
  • வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி.
  • உணவகங்கள், தேனீர் கடைகளில் இரவு 11 மணிவரை 50 சதவீத பேர் அமர்ந்து உணவு உண்ண அனுமதி.
  • பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் 50% அனுமதி.
  • பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை.
  • ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம்.
  • கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வியாபாரக் கடைகள் வரும் 10 ஆம் தேதி முதல் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

#corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #CoronaFightIndia #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients #Punjab #Tamilnadu #TNgovt

Related posts

டிசம்பர் 26 வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் எங்கெங்கு தெரியும்?

Admin

குடிமகன்களால் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி…

naveen santhakumar

சொத்தை கேட்ட மகன்… தர மறுத்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம்

Admin