தமிழகம்

நாளை முதல் ஊரடங்கு… இதற்கு மட்டும் தான் அனுமதி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதற்கெல்லாம் அனுமதி என பார்க்கலாம்….

  • தமிழ்நாட்டிற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள் (பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிருவாகம் உறுதிசெய்ய வேண்டும்.
  • அத்தியாவசிய பணிகளான தினசரி பால் , பத்திரிக்கை விநியோகம், அத்தியாவசிய விநியோகம், மருத்துவமனைகள், கூடங்கள், ஊர்தி போன்ற மருத்துவ பரிசோதனைக்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் சேவைகள் மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.
  • பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும்தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உற்பத்தி தொழிற் சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணியாளர்கள் பணிக்கு தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அறிவுறுத்துமாறு நிறுவனங்களின் வீட்டிலிருந்து பணிபுரிய தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ALSO READ  கட்டுப்பாடுகள் தீவிரமடைகிறதா?…. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது எவையெல்லாம் செயல்படும்:

  • 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு நடைமுறைப்படுத்தப்படும். ஊரடங்கு இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.
  • 9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
  • 9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை பயன்படுத்திக் அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.
  • பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.
  • அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தொழிற்பயிற்சி தவிர அனைத்துக் நிலையங்களில் கல்லூரிகள், பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.
  • பொது பேருந்துகள் மற்றும் புறநகர் இரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
  • மீன் மற்றும் காய்கறிச் சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அனைத்து சேவைத் துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.
ALSO READ  தமிழகமே பரபரப்பு… நாளை முதல் இரவு நேர ஊரடங்கு!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்- பள்ளிக்கல்வி ஆணையர்

naveen santhakumar

நளினிக்கு பரோல் கேட்டு தாய் வழக்கு… தமிழக அரசு சொன்னது என்ன?

naveen santhakumar

94 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி…! 

naveen santhakumar