தமிழகம்

ஆசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு… தமிழ்நாடு அரசு அனுமதி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பணியாளர் பிரிவு இணை இயக்குநர் நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ஆகஸ்ட் 1 நிலவரப்படி, அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்புகள் வரை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நி்ர்ணயம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்த வகையில், நடப்பு கல்விஆண்டில் (2021-2022) அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்பணியிட நி்ர்ணயம் மேற்கொள்ளப் பட்டது.

ALSO READ  “பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை” - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பணியாளர் நிர்ணய கணக்கீட்டின்படி கூடுதல் ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகள் கண்டறியப்பட்டு அனுமதி அளித்து ஆணை வழங்கப்படுகிறது. அனுமதி அளிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை நிரப்பத்தக்க காலிப்பணியிடங்களாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு கிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உதகை மலை ரயில் சேவை 4 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது..!

Admin

முதல் முறையாக எழுத்தாளருக்கு அரசு மரியாதை; 30 குண்டுகள் முழங்க கி.ராவின் உடல் நல்லடக்கம் !

News Editor

மக்களிடம் தானமாக பெற்ற 10 ஆயிரம் ரூபாயயை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த மனிதர் 

naveen santhakumar