தமிழகம்

கோவில் பிரசாதங்கள் தயாரிப்பில் அதிரடி மாற்றம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரசாதம் தயாரிப்பது, விளக்கு ஏற்றுவதற்கான வெண்ணெய், நெய் ஆகியவற்றை ஜன.1-ம் தேதி முதல் ஆவின் நிறுவனம் மூலமாக மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்களுக்கு ஆணையர் ஜெ.குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளகோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள், இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய் பொருட்களைகொள்முதல் செய்ய உத்தரவிடுமாறும், ஆவின் நிறுவனத்தில் 15 மி.லி. பேக்கிங்கில் இருந்து 20 கிலோ வரையிலான எடை கொண்ட பேக்கிங் வரை விற்பனைக்கு தயாராக உள்ளன என்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்.

கோயில் கருவறை, பிரகாரங்களில் தரமற்ற நெய்யை பயன்படுத்தி விளக்கு, தீபம் ஏற்றுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், பிரசாதங்களின் தரத்தை மேம்படுத்தவும், கோயில்களில் விளக்கு ஏற்றுவது, நைவேத்திய பிரசாதங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நெய், வெண்ணெய் போன்ற பொருட்களை வரும் ஜன.1-ம் தேதி முதல் ஆவின் நிறுவனம் மூலமாக மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  இந்திய ரூபாய் நோட்டில் நேதாஜி உருவப்படத்தை அச்சடிக்க கோரி மனு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் :

Shobika

பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் :

Shobika

தமிழ்நாட்டு குடிமகன்களுக்கு நற்செய்தி….

naveen santhakumar