தமிழகம்

கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழக்க நேரிட்டால் 10 லட்சம் நிவாரணம்- தமிழக அரசு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


 சென்னை:-

கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தன்னலம் கருதாமல் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சித் துறை பணியாளர்கள் என எவரேனும் கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழக்க நேரிட்டால் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதேபோல்  மயிலாப்பூரில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் அருண் காந்தி என்பவர் ஊரடங்கு பணியை அமல்படுத்தும் போது நெஞ்சுவலி காரணமாக நேற்று (08/04/2020) உயிரிழந்தார். அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண தொகை 10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ  வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை !  

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு நீர் மோர்  விநியோகம் !

News Editor

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி 6

naveen santhakumar

யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே- இது அடக்கமுடியாத யானை- இபிஎஸ்- ஸ்டாலின் காரசாரம்…!

naveen santhakumar