தமிழகம்

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் நாளை முதல் நியாயவிலைக் கடைகள் காலை 9 மணி முதல்- 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் செயல்படும் என உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

Distribution of ration tokens begins in Tamil Nadu - DTNext.in

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்கம்

இந்நிலையில், சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்:-

தமிழ்நாடு அரசு உத்தரவு

வரும் 8ம் தேதி முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாயவிலைக் கடைகள் செயல்படும். இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.

கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணைத் தொகை ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினை 15ம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல ஏதுவாக டோக்கன்கள் விநியோகத்தினை 11.06.2021 முதல் 14.06.2021 முடிய கடைப்பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.

ALSO READ  தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் இல்லை........

11.06.2021 முதல் 14.06.2021 முடிய முற்பகல் நேரத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பண்டங்களை வழக்கம்போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னையில் வாகன கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உலோக சிற்பங்கள் தயார்…

Admin

இளைஞன் ஒருவனால் மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…..

naveen santhakumar

முழு முடக்கம் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்; திமுக வேட்பாளர் எழிலன் 

News Editor