தமிழகம்

மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் அறிவிப்பு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 ஆம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மே 31-ஆம் தேதி ஊரடங்கு நீட்டித்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்த்துவது மட்டும் நீடிப்பது குறித்து நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ  சமரசமில்லாச் சட்டப்போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இயங்கலாம் எனவும் அதில் அதிகபட்சமாக 20 பேரும், வேன்களில் அதிகபட்சமாக 7 பேரும் பயணிக்கலாம் மெட்ரோ ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களுக்கு தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கருப்பு பூஞ்சை மருந்து; தமிழகத்திற்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு !

News Editor

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி:

naveen santhakumar

எக்காரணம் கொண்டும் என்னுடைய புத்தகங்களை வாங்கக்கூடாது; இறையன்பு ஐ.ஏ.எஸ் !

News Editor