தமிழகம்

18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு உத்தரவு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதலே ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆட்சியராக இருந்த சீத்தாலட்சுமி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்,

ALSO READ  எல்.முருகனுக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!!

தென்காசி மாவட்ட ஆட்சியராக கோபால் சுந்தரராஜ் மற்றும் ராமநாதபுரம் ஆட்சியராக சந்திரகலா நியமனம்,

விருதுநகர் ஆட்சியராக இருந்த கண்ணன் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக நியமனம்,

காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த மகேஸ்வரி வேளாண் மற்றும் உழவர்நலத்துறை இணைச் செயலாளராக நியமனம்,

ALSO READ  விளையாட்டு வீரர்களுக்கான அரசு பணியிடங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்ப்பு

அதேபோல, ஐ.ஏ.எஸ்.அதிகாரி விபு நாயருக்கு சிறப்பு திட்டங்கள் துரையின் முதன்மைச் செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது,

சமூக சீர்திருத்தங்கள் துறை முதன்மைச் செயலாளராக மங்கத்ராம் சர்மாவுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

144 தடை உத்தரவு பிறப்பிப்பு – 50க்கும் மேற்பட்டோர் கைது

naveen santhakumar

கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல் ஆணையருக்கு கொரோனா தொற்று !

News Editor

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்….

Shobika