தமிழகம்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு… சற்று நேரத்தில் வெளியாகிறது அரசாணை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்: இனி தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைகளில் நடைபெறும் என அறிவித்தார். அதற்கான காரணத்தை விளக்கிய அவர், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றில் விதிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share
ALSO READ  தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு - விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிகரிக்கும் சீறார் திருமணம்; ஆலோசனையில் அமைச்சர் !

News Editor

தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டமானின் பிறந்தநாள்!!!

naveen santhakumar

பெண் தொழிலாளர்கள் 12 மணி நேர போராட்டம் வாபஸ்!

naveen santhakumar