தமிழகம்

“வெள்ளி, சனி, ஞாயிறு” தினங்களில்.. புதிய அவசர உத்தரவு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ள இரவு நேர ஊரடங்கின் போது எவையெல்லாம் செயல்பட அனுமதி இல்லை என்பதைக் காணலாம்…

  1. தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.

2.வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு நடைமுறைப்படுத்தப்படும். வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு நடைமுறைப்படுத்தப்படும்

3.ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.

ALSO READ  தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு… சற்று நேரத்தில் வெளியாகிறது அரசாணை!

4. மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

5. அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

6.பயிற்சி நிலையங்கள் (Tralning and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

7. பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

8. அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.

ALSO READ  கட்டுப்பாடுகள் தீவிரமடைகிறதா?…. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

9.அனைத்து பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் Entertainment Parks / Amusement Parks) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

10.அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

11. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

12.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தல்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா :

naveen santhakumar

‘புத்தியுள்ள மனிதரெல்லாம்’ பாடலில் தனது எக்ஸ்ப்ரஷன் மூலம் அனைவரையும் கவர்ந்த சிறுவன்….

naveen santhakumar

வெறியா… வீரமா … நீங்கள் யார் பக்கம் ? கமல்ஹாசன் ட்வீட் ..!

News Editor