தமிழகம்

23 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு- கேரளா போக்குவரத்து துவங்கியது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து, வெளி மாநிலங்களுக்கு அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Tamil Nadu and KSRTC will resume bus service to Kerala from Wednesday »  Livenewskerala

தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன், தமிழகம் – கர்காடகம், தமிழகம் – ஆந்திரா இடையே அரசு பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.

எனினும், கேரளாவில் தொற்று அதிகரித்து வந்ததால், தமிழகம் – கேரளா இடையே அரசு பஸ் போக்குவரத்து துவங்கப்படவில்லை.

ALSO READ  இ-பாஸ், இ-பதிவு தேவையில்லை- தமிழக அரசு

இந்நிலையில், 23 மாதங்களுக்கு பிறகு ‘தமிழகம் – கேரளா இடையே பொது போக்குவரத்து துவங்கப்படும்’ என, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று, அறிவித்தார்.

இதன்படி கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 10 தமிழக அரசு பேருந்துகள் பாலக்காட்டிற்கும், பாலக்காட்டிலிருந்து கோவைக்கு 10 கேரளா மாநில பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

ALSO READ  மெகா தடுப்பூசி முகாம் - தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

மேலும், நீலகிரி மாவட்டம், கூடலூரிலிருந்து, கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம், சுல்தான்பத்தேரிக்கு இன்று, காலை முதல் அரசு பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.

அதே போன்று கேரளா மலப்புரம் மாவட்டம், பெருந்தல்மன்னாவிலிருந்து கூடலூருக்கு கேரளா அரசு பஸ் போக்குவரத்தும் துவங்கப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தா.பாண்டியன் உடல்நிலை குறித்து மு.க ஸ்டாலின் ட்வீட் !

News Editor

20 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்:

naveen santhakumar

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு: நாளை விசாரணை..

Shanthi