தமிழகம்

இயல்பை விட அதிக மழை – சென்னையில் 77%; தமிழகத்தில் 54% அதிகம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை விட 54 சதவீதம் அதிகமாகவும், சென்னையில் வழக்கத்தைவிட 77 சதவீதம் அதிகமாகவும் மழை பதிவாகியுள்ளது.

Live Updates: சென்னை அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையைக்  கடக்கும்; 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும்!| tamil news today 11-11-2021  rain alert news and ...

தென்மேற்குப் பருவமழை எப்போதும் தமிழ்நாட்டிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் வடகிழக்குப் பருவமழை அதிக மழைபொழிவை கொடுக்கும்.

இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் இதுவரை 20 செ.மீ.க்கு பதில் 39 செ.மீ மழை பதிவானது. இது இயல்பை விட 54% அதிகமாகும். சென்னையில் அக்டோபர் 1 முதல் இதுவரை 23 செ.மீ.க்கு பதில் 47 செ.மீ மழை பதிவானது. இது இயல்பைவிட 77% அதிகமாகும்.

ALSO READ  கல்லூரிக்குள் புகுந்த கொரோனா… 40 மருத்துவ மாணவர்களுக்கு தொற்று!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மதியம் 4 மணி வரை கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மட்டுமல்லாது தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. கனமழை காரணமாக விவசாய பயிர்களை மூழ்கடித்துள்ளது. இவையனைத்தும் வழக்கத்திற்கு மாறாக இயல்பை தாண்டிய மழையால் நடந்த விபரீதங்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்:

naveen santhakumar

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

naveen santhakumar

சிக்கன், மட்டன் விற்பனை செய்த வியாபாரி மீது வழக்கு !

News Editor