தமிழகம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணைய குழு கூட்டம்: அரசு தேர்வுகளுக்கான தேதி வெளியாக வாய்ப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

சென்னையில் வருகிற 27ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணைய குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வு நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Tamil Nadu Public Service Commission

அரசுத் துறை, மாநில பொது துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து அரசு தேர்வு ஆணைய குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ALSO READ  பலே கில்லாடி...ஒரே மாதத்தில் 2 பெண்களை ஏமாற்றி திருமணம்….

தமிழக அரசின் இன்ற அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) இனி நடத்த உள்ள அனைத்து தேர்வுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்வுகளில் அதிரடி மாற்றத்தை கொண்டுவர உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணைய குழு கூட்டம், டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் வருகிற 27ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா மற்றும் உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

ALSO READ  சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு- அமைச்சர் அன்பில் மகேஷ்..!
TNPSC Recruitment 2021 Notification, 04 Architectural Assistant Job  Vacancies, Apply Online @ tnpsc.gov.in

இக்கூட்டத்தைத் தொடர்ந்து குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வுகளை நடத்துவது குறித்தும் தேர்வுக்கான தேதிகளையும் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று தகவல்கள் தெரிகின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாட காவல்துறையோடு இணைந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை

Admin

தற்கொலை தீர்வல்ல -நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்

News Editor

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைந்தார்:

naveen santhakumar