தமிழகம்

அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்த முடிவு – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

அரசுப்பணிகளில் பெண்களுக்கான உள் இடஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்... திமுக ஐடி  விங்க் என்ன ஆகும்? | PTR Palanivel Thiagarajan Dissatisfaction with  operations

நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்,

ALSO READ  'பப்ஜி' மதன் கைது- சிபிசிஐடி அதிரடி…!

அவையாவன, தேர்வு முகமைகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித்தேர்வாக கட்டாயமாக்கப்படும்.

தமிழ் தகுதித்தேர்வாக சேர்க்கப்படுவதால் தமிழக இளைஞர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு இதன் மூலம் உறுதிப்படுவதாக கூறப்படுகிறது.

அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டாக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ALSO READ  சென்னையில் டபுள் டக்கர் பாலம்…!

அதுபோன்று அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…..

Shobika

‘சார், உன் ATM கார்டு மேல இருக்க நம்பர் சொல்லு சார்’-கும்பலை டெல்லியில் கைது செய்த தமிழக போலீசார்….

naveen santhakumar

நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்! இளைஞர் கைது..

Shanthi