தமிழகம்

ரூ.10 ஆயிரம் அபராதம் – திருச்சி மாநகராட்சி அதிரடி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாலைகள், தெருக்களில் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூ.10,000 அபராதம் – அதிரடி அறிவிப்பு!  - தமிழ்நாடு

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தெருக்கள், சாலைகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தான்தோன்றித்தனமான சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், இதுபோன்ற விபத்து சம்பவங்கள் தொடராமல் தடுக்க, மாநகராட்சி அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ALSO READ  மதிமுகவின் 28 ஆம் ஆண்டு துவக்க விழா !
சாலைகளில் கால்நடை சுற்றித் திரிந்தால் ரூ.10,000 அபராதம்.. மாநகராட்சி அதிரடி  அறிவிப்பு..! |

கால்நடைகளை வளர்க்கும் நபர்கள் தங்களுக்குச் சொந்தமான விலங்குகளை தங்களது வளாகத்திற்குள்ளேயே அல்லது வீட்டிலேயே கட்டி வைத்து சுகாதார முறைப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் தெருக்களிலோ, சாலைகளிலோ கால்நடைகளை சுற்றித்திரியவிட்டால், அவை மாநகராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்படும்.

ALSO READ  நேபாளத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து..

மேலும் அவற்றின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு உரிமையாளர் பெற்றுக்கொள்ளவில்லை எனில் மாநகராட்சி அருகிலுள்ள கால்நடை சந்தையில் விற்பனை செய்து கிடைக்கும் தொகையை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கனமழை எதிரொலி: 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

naveen santhakumar

Swab Test?? சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்புகிறீர்களா?? உங்களுக்கான பதிவு…

naveen santhakumar

கையடக்க CPU-ஐ கண்டுபிடித்த 9ம் வகுப்பு மாணவன் – தமிழக முதல்வர் பாராட்டு

News Editor