தமிழகம்

பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் டி.டி.ரங்கசுவாமி மறைவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் (நிதி) மற்றும் நிறுவன செயலாளர் டி.டி.ரங்கசுவாமி (97) காலமானார்.

TVS Group veteran TT Rangaswamy passes away - The Hindu BusinessLine

சுந்தரம் பைனான்ஸ் நிறுவனர் டி.எஸ்.சந்தானம் அழைப்பின்பேரில் மும்பையில் இருந்து சென்னை வந்த டி.டி.ரங்கசுவாமி, சென்னை பாடியில் தொடங்கப்பட்ட லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் 1960-ம் ஆண்டு நிதித்துறையில் தலைமை பதவி வகித்தார்.

பின்னர், டி.எஸ்.சந்தானத்தின் ஆலோசனையின்படி 1963-ம் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிதிதுறையில் தலைமை பதவிக்கு சென்ற டி.டி.ரங்கசுவாமி ஓய்வுபெறும் வரை நிறுவனத்தின் நிதித்துறையில் பணியாற்றினார்.

ALSO READ  முதுபெரும் தமிழறிஞர் இளங்குமரன் மறைவு!

மேலும், நிறுவனத்தின் செயல் இயக்குநர் (நிதி) மற்றும் நிறுவன செயலாளராகவும் பதவி உயர்வு பெற்றார். டிவிஎஸ் குழுமத்தின் பிரேக்ஸ் இந்தியா, லூகாஸ் டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாக டி.டி.ரங்கசுவாமி பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், டி.டி.ரங்கசுவாமி வயது முதிர்வு காரணமாக காலமாமனார். அவரது இறுதி சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றது.

ALSO READ  எழுத்தாளர், நடிகர் ‘பாட்டையா’ பாரதி மணி காலமானார்

டி.டி.ரங்கசுவாமிக்கு விமலா என்ற மனைவியும், டி.டி.நரேந்திரன் (சென்னை ஐஐடி முன்னாள் பேராசிரியர்). டி.டி.சீனிவாச ராகவன் (சுந்தரம் பைனான்ஸ் முன்னாள் நிர்வாக இயக்குநர்) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எப்போது பக்ரீத் தலைமை ஹாஜி அறிவிப்பு…!

naveen santhakumar

மெகா தடுப்பூசி முகாம் -இலக்கைத் தாண்டி தடுப்பூசி செலுத்திச் சாதனை!

Admin

சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு….

naveen santhakumar