தமிழகம்

இரண்டு நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இதர 28 மாவட்டங்களில் தற்செயல் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இவ்விரு நாள்களிலும் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 6, 9-ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பொது  விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு || Local body election held 9 districts  october 6 and 9 public holiday

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளை மற்றும் வருகிற 9ஆம் தேதி நடைபெறுகிறது.

நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று (அக்டோபர் 4) மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

ALSO READ  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000- விரைவில் அறிவிப்பு..

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதர 28 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் தற்செயல் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதியில் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னதாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் 9 மாவட்டங்களிலும் 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் கட்டாயமில்லை !

இந்த அறிவிப்பினை அந்தந்த மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பள்ளிகள் தேர்தல் வாக்குசாவடி மையங்களாக செயல்படுவதாலும், தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிக்கன், மட்டன் விற்பனை செய்த வியாபாரி மீது வழக்கு !

News Editor

சீமராஜாவாக நடித்ததில் பெருமைப்படுகிறேன்.. சிங்கம்பட்டி ஜமீன் மறைவிற்கு சிவகார்த்திகேயன் இரங்கல்…!

naveen santhakumar

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள் அதிகரிப்பு..

Shanthi