தமிழகம்

ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பயிற்சி பெற்ற இரண்டு மோப்ப நாய்கள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறப்பு பயிற்சி பெற்ற இரண்டு மோப்ப நாய்கள் தெற்கு ரயில்வேயில் இணைப்பு. பெல்ஜியன் மாலினாய்ஸ் என்ற இனத்தை சேர்ந்த ஒரு வயது நிரம்பிய டயானா மற்றும் ஜாக் என்ற இரண்டு மோப்ப நாய்கள் ரயில்வே பாதுகாப்பு படைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்டது.

ALSO READ  பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி

இந்த இரண்டு மோப்ப நாய்களுக்கும் குவாலியரில் உள்ள தேசிய பயிற்சி மையத்தில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது, பயிற்சி முடிந்து இந்த 2 மோப்ப நாய்களும் தெற்கு
ரயில்வேயில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாது முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் சர்வீஸ், பதற்றமான இடங்களில் இந்த மோப்ப நாய்கள் சிறப்பாக செயல்பட பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிமுக வினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்

News Editor

ரூ.10 ஆயிரம் அபராதம் – திருச்சி மாநகராட்சி அதிரடி!

naveen santhakumar

கொரோனா தொற்றால் புளியங்குடி டிஎஸ்பி உயிரிழப்பு… 

naveen santhakumar