தமிழகம்

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை – மாநகராட்சி அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்று திண்டுக்கல் மாநகராட்சி அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடுப்பு ஊசி போடும் இடங்களை தேடி அலையும்  மக்கள் | Demand to display Vaccination Centre at Dindigul Corporation

பெருவாரியான மக்கள் கொரோனா அச்சம் காரணமாக முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை.

தற்போது கொரோனாவின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த தொற்று பரவிவிட்டது.

ALSO READ  192 மாணவர்களுக்கு கொரோனா தொற்று; அதிர்ச்சியில் அரசு!

அதேசமயம், மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், தடுப்பூசி போடாதவர்கள் பொதுஇடங்களுக்கு செல்ல தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி போடாதவர்கள் பொதுஇடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்நிலையில், தற்போது திண்டுக்கல் மாநகராட்சி திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்று அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரவில் நிகழ்ந்த அதிசயம் – கண்டுகளித்த மக்கள்..!

News Editor

அதிகரிக்கும் கொரோனா பரவல்; புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு !

News Editor

பேராசிரியர் பால் சந்திரமோகன் மீதான பாலியல் புகார்; புகார் அளிக்க அஞ்சும் மாணவிகள் ..!

News Editor