சினிமா தமிழகம்

இயக்குனரும் நடிகருமான விசு காலமானார்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனரும் நடிகருமான விசு (74) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், எழுத்தாளர்,நாடக நடிகர், டிவி தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விசு.

1945ம் ஆண்டு பிறந்தவர் விசு. இவரது முழுப்பெயர் எம்.ஆர்.விஸ்வநாதன். ‘கண்மணி பூங்கா” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

ALSO READ  #தமிழ்கடவுள்முருகனுக்குஅரோகரா- விஜயகாந்த் ட்வீட்…. 

சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு, திருமதி ஒரு வெகுமதி ஆகிய படங்களை இயக்கி, நடித்தும் உள்ளார். இதில் ‘சம்சாரம் அது மின்சாரம்’ தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவரின் ‘அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

ALSO READ  சென்னையில் 3 நாட்களாக பாரத ஸ்டேட் வங்கியின் ATM மையங்களில் கொள்ளை - குற்றவாளிகள் கைது

சிறுநீரக் கோளாறு காரணமாகவும் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று மாலை சரியாக 5:30 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக தெரிகிறது. இவரது உடல் துரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு எப்போது நடைபெறும் என்று தகவல்கள் தெரியவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கிருஷ்ணகிரி தி.மு.க. எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா…

naveen santhakumar

விஜய்க்கு சிலை வைத்த மங்களூர் விஜய் மக்கள் இயக்கத்தினர்..!

naveen santhakumar

போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ் !

News Editor