தமிழகம்

முதுபெரும் தமிழறிஞர் இளங்குமரன் மறைவு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முதுபெரும் தமிழறிஞர் புலவா் இரா. இளங்குமரன் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 94.

மறைந்த தமிழறிஞர் இளங்குமரனார் பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர்.

திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் 1927ஆம் ஆண்டு பிறந்த இவர், திருநகரில் உள்ள அரசுப் பள்ளியில் 1946ஆம் ஆணடு தமிழ் ஆசிரியராக தமது தமிழ் பணியை தொடங்கினார். சென்னை பல்கலைக்கழகத்தில் 1951ஆம் ஆண்டு புலவா் தேர்வில் முதல் வகுப்பில் தோச்சி பெற்றார்.

ALSO READ  தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

இவர் எழுதிய ‘திருக்கு கட்டுரைத் தொகுப்பு’ எனும் நூலை 1963ஆம் ஆண்டு அன்றைய பிரதமா் நேரு வெளியிட்டார். ‘சங்க இலக்கிய வரிசையில் புானூறு’ எனும் நூலை 2003ஆம் ஆண்டு அன்றைய குடியரசு தலைவா் அப்துல்கலாம் வெளியிட்டார்.

தமிழகமெங்கும் பல்வேறு ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் உதவிகளையும், தமிழ்வழி திருமணங்களையும் நடத்தி வைத்துள்ளார். இவர் 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தஞ்சாவூர் : கழிவறை தொட்டிக்குள் இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு

naveen santhakumar

ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து மத்திய சுகாதாரத்துறைக்கு எம்.பி.ஜோதிமணி கடிதம் !

News Editor

ஜல்லிக்கட்டில் மீண்டும் டவுசரை கழட்டி ஓடவிட்ட அமைச்சர் செந்தில் தொண்டமானின் வீர மிகு காளை

News Editor