தமிழகம்

கொரோனா பணிக்காக 1.25 கோடி நிதியுதவி வழங்கிய  வி.ஐ.டி பல்கலைக்கழகம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை. 

தமிழகத்தில் பல, மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதி உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. அதனையடுத்து இதனை சமாளிப்பதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா நிதி குடுத்த உதவ அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வி.ஐ.டி பல்கலைக்கழகம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், சிகிச்சைகளுக்காகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ( வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்)வி ஐ டி வேலூர் மற்றும் வி ஐ டி சென்னை பேராசிரியர்கள்,  ஊழியர்களின்  ஒரு நாள் சம்பளம் மற்றும் வி ஐ டி நிர்வாகம் சார்பில்  1.25 கோடி ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம்வி ஐ டி பதிவாளர்  சத்திய நாராயணன் வழங்கினார். 


Share
ALSO READ  தொழிலாளர்களுக்கும் திமுகவிற்குமான உறவை யாராலும் அழித்து விட முடியாது..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தயவுசெய்து மாஸ்க் போடுங்க; கையெடுத்து கும்பிட்ட காவல் ஆய்வாளர் !

News Editor

கமல்ஹானுக்கு கொரோனா தொற்றா.?????

naveen santhakumar

ஆசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு… தமிழ்நாடு அரசு அனுமதி!

naveen santhakumar