தமிழகம்

கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிருஷ்ணகிரி:-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள ஒன்னகரை காப்புக்காடு வனச்சரகத்தில் இன்று (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு செடிகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு வனவர் (Forester) பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் சக்திவேல் மற்றும் அரசு ஆண்கள் பள்ளி உதவித் தலைமையாசிரியர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  

ALSO READ  கிருஷ்ணகிரியில் 'சுவாசம்' தொண்டு நிறுவனத்தின் சார்பில் இலங்கை அகதிகளுக்கு உதவி...

இந்நிகழ்ச்சியில் வனச்சரகத்தில் பணியாற்றும் தமிழ்வாணன், சுப்பிரமணியன், சுப்பிரமணி, பாலகிருஷ்ணன், பழனிசாமி ஆகியோருக்கு ஜேஆர்சி ஆசிரியர் கணேசன் நினைவு பரிசுகள் மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்தினார். 

இந்நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் ஆர்கே ஓட்டல் ராஜா, கார்த்தி, மோகன், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் ராமமூர்த்தி, முனுசாமி, கனகதுரை ஆகியோர் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ஆளுக்கு ஒரு செடியை நட்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

News Editor

சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்… இதுவரை இத்தனை லட்சமா?

naveen santhakumar

சென்னையில் பெண் புரோகிதரால் செய்து வைக்கப்பட்ட புதுமை திருமணம்.

naveen santhakumar