தமிழகம்

எழுத்தாளர், நடிகர் ‘பாட்டையா’ பாரதி மணி காலமானார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வயது மூப்பு காரணமாக எழுத்தாளரும், நடிகருமான ‘பாட்டையா’ பாரதி மணி என்று அழைக்கப்பட்ட கே.கே.எஸ்.மணி நேற்று காலமானார். அவருக்கு வயது 84.

Bharathi Mani: பிரபல நடிகர் பாரதி மணி காலமானார்..! | Actor and director bharathi  mani pass away

நாகர்கோவில் அருகேயுள்ள பார்வதிபுரத்தில் பிறந்த பாட்டையாவின் இயற்பெயர் மணி. 2000ஆம் ஆண்டு வெளியான‘பாரதி’ படத்தில் பாரதியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்ததால் பாரதி மணி என்று அழைக்கப்பட்டார்.

எழுத்தாளர் 'பாட்டையா' பாரதி மணி மறைந்தார் | bharathi mani passed away at  the age of 84 - hindutamil.in

மேலும், ‘பாபா’, ‘ஆட்டோகிராஃப்’, ‘ஒருத்தி’ ‘புதுப்பேட்டை’, ‘அந்நியன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர பல்வேறு மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

ALSO READ  முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்கம்!

‘பல நேரங்களில் பல மனிதர்கள்’, ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’, ‘பாட்டையாவின் பழங்கதைகள்’ உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இலக்கிய வட்டாரத்தில் ‘பாட்டையா’ என்று அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று (நவ.16) வயது மூப்பு காரணமாக உயிரிழந்த மணியின் மறைவுக்குத் திரை பிரபலங்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து – சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதலமைச்சர்

naveen santhakumar

பேராசிரியர் பால் சந்திரமோகன் மீதான பாலியல் புகார்; புகார் அளிக்க அஞ்சும் மாணவிகள் ..!

News Editor

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்- எடப்பாடி பழனிசாமி… 

naveen santhakumar