உலகம் தொழில்நுட்பம்

புதிய மின்சார விமானத்தை அறிமுகம் செய்த ரோல்ஸ் ராய்ஸ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தனது புதிய மின்சார விமானத்தை அறிமுகம் செய்து சந்தையை அதிர வைத்துள்ளது பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமும் விமான எஞ்சின்கள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமுமான ரோல்ஸ் ராய்ஸ்.

ACCEL – என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த மின்சார விமானத்தில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். 250 வீடுகளுக்கு மின்வசதி கொடுக்கும் அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளதால், ஒருமுறை முழுவதும் மின்சாரம் ஏற்றப்பட்டால் 321 கிலோ மீட்டர்கள் தூரத்தை இந்த விமானத்தால் கடக்க முடியும்.

இந்த விமானத்தில் மூன்று எடை குறைவான மின்சார மோட்டார்கள் உள்ளன. இவற்றின் மூலம் மணிக்கு 480 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இதுவே மின்சார விமானத்தின் மிக அதிக வேகமாக உள்ளது.

ALSO READ  நவாஸ் ஷெரீப் மருமகன் கைது:

இந்த விமானத்தை இங்கிலாந்து அரசாங்கத்தின் நிதி உதவியோடும், YASA, Electroflight – ஆகிய விமானத் தயாரிப்பு நிறுவனங்களின் ஆலோசனைகளோடும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாயன் காலண்டர்படி இந்த வருடம்தான் 2012… உலகம் முடிவுக்கு வருகிறதா?…

naveen santhakumar

கண்ணாடியால் உருவாக்கப்பட்ட ஹைஜீனிக் கழிப்பறை:

naveen santhakumar

“தீயணைப்பு வீரராக மாறுவேடமிட்டு தீக்குளித்த நாடு, பாகிஸ்தான் ” -இந்தியா பதிலடி.

Admin