தொழில்நுட்பம்

அந்த சலுகையை நீக்கியது ஏர்டெல் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவந்த ரூ. 49 விலை என்ட்ரி லெவல் சலுகையை நீக்கி இருக்கிறது. அதன்படி ஏர்டெல் பிரீபெயிட் சலுகை துவக்க விலை தற்போது ரூ. 79 என மாறி இருக்கிறது. ரூ. 79 ஸ்மார்ட் ரீசார்ஜ் சலுகையில் இருமடங்கு டேட்டா, நான்கு மடங்கு அவுட்கோயிங் நிமிடங்கள் வழங்கப்படுகிறது.

Airtel Rs. 448, Rs. 499, Rs. 599, and Rs. 2,698 Prepaid Plans Now Bundle  Disney+ Hotstar VIP Subscription | Technology News

முன்னதாக போஸ்ட்பெயிட் சலுகை விலையை ஏர்டெல் மாற்றியமைத்தது. தலைசிறந்த கனெக்டிவிட்டியை வழங்கும் நோக்கில் புதிய மாற்றங்களை மேற்கொள்வதாக ஏர்டெல் அறிவித்து இருக்கிறது. ஏர்டெல் என்ட்ரி லெவல் ரிசார்ஜ் சலுகைகளில் அக்கவுண்ட் பேலன்ஸ் பற்றிய கவலை இன்றி வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் இணைப்பில் இருக்கலாம் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

குறைந்த விலை சலுகையை நீக்கிய ஏர்டெல் || Tamil News Airtel pre-paid recharge  packs now start at Rs. 79

ரூ. 79 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 64 டாக்டைம், 200 MB டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு நொடிக்கு ஒரு பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முந்தைய ரூ. 49 சலுகையில் ரூ. 38.52 டாக்டைம், 100 எம்.பி. டேட்டா, அழைப்புகளை மேற்கொள்ள நொடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ALSO READ  விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல்; விற்பனைக்கு வரும் மலிவு விலை கூகுள்-ஜியோ ஸ்மார்ட்போன் …!
Bharti Airtel to launch Rs 2500 4G smartphone to counter JioPhone - Tamil  Gizbot

புதிய மாற்றம் காரணமாக ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளரிடம் இருந்து பெற்றுவந்த சராசரி வருவாய் அதிகரிக்கும். எனினும், குறைந்த விலை சலுகையை பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு இனி ரூ. 30 கூடுதல் செலவாகும். இந்த மாற்றம் ஜூலை 28-ம் அமலுக்கு வந்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

BSNL நிறுவனத்தின் ரூ. 45 விலையில் ஆஃபர் :

Shobika

‘மேப் மை இந்தியா’; கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் இந்தியா..!

News Editor