உலகம் தொழில்நுட்பம்

கொரோனா தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவி்ல் கொரோனா பாதிப்பு காரணமாக 3,40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15000. உலக நாடுகள் அனைத்தும் தங்களால் இயன்ற விழிப்புணர்வு முயற்சிகளையும் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதில்களை அதுதொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களையும் அமேசானில் அலெக்சா மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சிரி ஆகிய ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் பதில் அளித்து வருகின்றனர்

கூகுள் நிறுவனம் ஏற்கனவே கொரோனா விழிப்புணர்வு செய்திகளுக்கான பிரத்யேகமான வலைதளத்தைத் தொடங்கியுள்ளது, மைக்ரோசாஃப் நிறுவனம் ட்ராக்கர் மற்றும் ஹெல்த்கேரையும், இந்திய அரசு வாட்சப் சாட்பாட்டையும் தொடங்கியுள்ளது.

ALSO READ  தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்ட சீக்கிய அமைப்பு: கனடா அதிரடி… 

ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸான அமேஸானின் அலெக்ஸா கொரோனா தொடர்புடைய கூடுதல் விஷயங்களை US Centers for Disease Control and Prevention CDC-ன் இணையதள தரவுகளிலிருந்து தருகிறது.

அதேசமயம் சிரி WHO மற்றும் CDC-ன் மூலமாக தரவுகளைப் பெற்று நமது கேள்விகளுக்கு பதில்களை தருகிறது.

அதேசமயம் கூகுள் அசிஸ்டன்ட் கோனார் தொடர்பாக வெளிவரும் செய்திகளிலிருந்து நமக்கான தகவல்களை அளிக்கிறது.

இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் COVID 19 குறித்த விழிப்புணர்வு, சானிட்டைசர் விவரங்கள், எத்தனை சதவிகிதம் ஆல்கஹால் இருக்கவேண்டிய சானிட்டைசர்கள், மாஸ்க்குகள் பயன்படுத்த வேண்டிய முறை, தேவையறிந்து அதை அணிய வேண்டிய சூழல் என அனைத்துக்கும் தெளிவான பதில்களையும், அறிவியல் ரீதியான விளக்கங்களையும் அளிக்கிறது. வாய்ஸ் செயலிகள் மூலமாக எந்த பொய்த் தகவலும் சென்று சேர்ந்துவிடாமல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது கூகுள் நிறுவனம்.

ALSO READ  சீன நாட்டவர்களுக்கு ஹோட்டலில் உணவு கிடையாதா ?

தற்போது சீனாவின் ஹுவாவே மொபைல் நிறுவனம் குர்ஆனோ தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க தனது முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆன சவுண்ட் எக்ஸி ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவலுக்கிடையே சர்வதேச கவனத்தை ஈர்த்த இலங்கை திருமணம்…

naveen santhakumar

அணிலை சாப்பிட்ட 15 வயது சிறுவன் புபோனிக் பிளேக் நோயால் பலி… 

naveen santhakumar

மீண்டும் அரசியலில் களம் இறங்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்:

naveen santhakumar