தொழில்நுட்பம்

கொரோனா காலத்திலும் அசுர வளர்ச்சி கண்ட ஆப்பிள் நிறுவனம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆப்பிள் நிறுவனத்தின் கடந்த காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் இந்திய மதிப்பில் ரூ. 1,61,588 கோடிகளாக அதிகரித்து இருக்கிறது. ஐபோன் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் விற்பனையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

Apple iPhone SE Price in India, Specifications, Comparison (28th July 2021)

ஆப்பிள் நிறுவன வருவாய் வருடாந்திர அடிப்படையில் 36 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஐபோன் வருவாய் 50 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இவற்றுடன் மேக் மற்றும் ஐபேட் மாடல்களின் விற்பனையும் வருடாந்திர அடிப்படையில் அதிகரித்து இருக்கிறது.அதிக பிரபலம் இல்லாத ஆப்பிள் நிறுவனத்தின் ‘இதர பொருட்கள்’ பரிவு விற்பனையும் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இந்த பிரிவில் ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் விற்பனையில் கணிசமான பங்குகளை பெற்றுள்ளன.

Identify your iPhone model - Apple Support

கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகின் பல்வேறு நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதே ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. இத்துடன் புது ஸ்மார்ட்போன் வாங்குவோரில் பலர் 5G சாதனங்களை வாங்க திட்டமிட்டதும் ஐபோன் விற்பனை வளர்ச்சிக்கு காரணமாகும்.


Share
ALSO READ  ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்ப படிவம் ரூ. 2.5 கோடிக்கு விற்பனை :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘மேப் மை இந்தியா’; கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் இந்தியா..!

News Editor

சாம்சங் நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் :

Shobika

குவியும் பயனர்களின் புகார்கள்…! வாய் திறக்காத இன்ஸ்டாகிராம் நிறுவனம்..!

News Editor