தொழில்நுட்பம்

BMW-3 புதிய சீரிஸ் கிரான் லிமோசின் அறிமுகம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

BMW நிறுவனம் இந்தியாவில் புதிய 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய BMW 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடல் தொடக்க விலை ரூ. 51.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய லிமோசின் வெர்ஷன் ஸ்டான்டர்டு 3 சீரிஸ் சலூன் மாடலின் நீண்ட வீல்-பேஸ் கொண்ட வேரியண்ட் ஆகும். 3 சீரிஸ் ஸ்டான்டர்டு மாடல் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய கிரான் லிமோசின் மாடல் 2 பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.BMW 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 53.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கிரான் லிமோசின் மாடலுக்கான முன்பதிவு இந்த மாத துவக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதிய BMW 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலில் 2.0 லிட்டர் ட்வின்பவர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 258 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.இத்துடன் 2.0 லிட்டர் டீசல் யூனிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.6 நொடிகளில் எட்டிவிடும். இரு என்ஜின்களுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.


Share
ALSO READ  போராட்டம் நடத்தியவர்கள் மீது பாய்ந்த கார்….6 பேர் படுகாயம்….
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெறும் ரூ.6699-க்கு அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போன் :

Shobika

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்……மறைந்து போகும் மெசேஜ்கள்…..

naveen santhakumar

கிளப்ஹவுஸ்(clubhouse) செயலியில் நியூ அப்டேட்….

Shobika