தொழில்நுட்பம்

விரைவில் BMW- S1000R மாடல் இந்திய சந்தையில் அறிமுகம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

BMW மோட்டராட் நிறுவனம் புதிய தலைமுறை BMW S1000R மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.BMW S1000R நேக்கட் ஸ்போர்ட் வெர்ஷன் ஆகும். இதன் என்ஜின், பிரேம், ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவை முந்தைய மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படுகிறது.

இதன் டிசைன் சிறிதளவு மாற்றப்பட்டு புது பாடி பேனல்கள், எல்இடி ஹெட்லைட், டிஆர்எல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய BMW S1000R மாடலில் பிளெக்ஸ் பிரேம் சேசிஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 199 கிலோ எடை கொண்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 6.5 கிலோ குறைவு ஆகும். 

புதிய தலைமுறை BMW S1000R மாடலில் 999சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 162 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.2 நொடிகளில் எட்டிவிடும். இது அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.


Share
ALSO READ  இந்தியாவில் விமான போக்குவரத்து கட்டணம் உயர்வு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமேசான் பிரைம் டே சேல் விரைவில் தொடக்கம் :

Shobika

ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் விலையில் மாற்றம் :

Shobika

ஐபோன் புகைப்பட போட்டி…பரிசை வென்ற இந்தியர்….!!!

Shobika