தொழில்நுட்பம்

மிக மிக குறைந்த விலையில் மொபைல் அறிமுகம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டிசோ பிராண்டின் புது வயர்லெஸ் இயர்போன் மாடல்கள் கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது டிசோ பிராண்டு புது பீச்சர் போன் மாடல்கள் சத்தமின்றி அறிமுகமாகி இருக்கின்றன. இரு மாடல்களும் டிசோ ஸ்டார் 300 மற்றும் ஸ்டார் 500 என அழைக்கப்படுகின்றன. முன்னதாக இரு மொபைல் போன்களும் எப்.சி.சி. வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Dizo Star 500 and Dizo Star 300 Launched In India at a Cheap Price | ரூ. 1,299  விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்டான போன் இது தான்.. ஆனாலும் ஜியோவுக்கு  ஈடாகாது.. ஏன் தெரியுமா ...

புதிய 2ஜி மொபைல் போன் மாடல்களில் Spreadtrum SC6531E பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் QQVGA மற்றும் QVGA ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் பிரைமரி கேமரா, ஆங்கிலம் உள்பட தமிழ், இந்தி, குஜராத்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கும் வசதி உள்ளன.

டிசோ ஸ்டார் 300 அம்சங்கள் :

  • 1.77 இன்ச் 160×120 பிக்சல் QQVGA LCD ஸ்கிரீன்
  • 26MHz SC6531E பிராசஸர்
  • 32MB ரேம்
  • 32MB மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 0.08 MB பிரைமரி கேமரா
  • 3.5mm ஆடியோ ஜாக்,FM ரேடியோ,MP3 பிளேயர்
  • 2ஜி GSM 900/1800, ப்ளூடூத் 2.1, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
  • 2550 MAH பேட்டரி
ALSO READ  யோகா கலையின் பிறப்பிடம் குறித்து சர்ச்சை பேச்சு -கே.பி. சர்மா ஒலி
ரூ. 1299 விலையில் புது மொபைல் போன் அறிமுகம் || Tamil News DIZO Star 300 and  DIZO Star 500 feature phones launched in India

டிசோ ஸ்டார் 500 அம்சங்கள் :

  • 2.8 இன்ச் 320×240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன்
  • 26MHz SC6531E பிராசஸர்
  • 32MB ரேம், 32MB மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 0.3 MB பிரைமரி கேமரா
  • ஸ்ட்ரிப் டார்ச்
  • 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, MP3 பிளேயர்
  • 2G GSM 900/1800, ப்ளூடூத் 2.1, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
  • 1900 MAH பேட்டரி
ALSO READ  5வது போட்டியிலும் வெற்றி பெற்று கெத்து காட்டிய இந்திய அணி…

டிசோ ஸ்டார் 300 மாடல் பிளாக், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,299 ஆகும். டிசோ ஸ்டார் 500 மாடல் பிளாக், கிரீன் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 ஆகும். இவற்றின் விற்பனை ஜூலை 8-ம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ காம்பேக்ட் மாடலின் புது வேரியண்ட்கள் இந்தியாவில் அறிமுகம் :

Shobika

வாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்!!!!!

naveen santhakumar

சாம்சங் கேலக்ஸி Z போல்டு 2 ஸ்மார்ட்போன் விற்பனை நிறுத்தம் :

Shobika