தொழில்நுட்பம்

சோதனை கட்டத்தில் இந்திய அரசின் ஜிம்ஸ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பல்வேறு மக்களின் வாட்ஸ்ஆப் கணக்குகளை பெகாஸஸ் என்னும் ஸ்பைவேர் உளவு பார்த்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக உலகம் முழுவதும் சுமார் 1400வாட்ஸ்ஆப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டன. குறிப்பாக இதில் இந்தியாவை சேர்ந்த 121முக்கிய நபர்களின் கணக்குகள் அடங்கும். இந்த நிலையில் இந்திய அரசாங்கம் ஜிம்ஸ் -GIMS(government instant messaging system) என்ற பிரத்யேச் செயலி ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த செயலி தற்போது ஒடிசா போன்ற மாநிலங்களில் சோதனை கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.கேரளாவில் இருக்கும் தேசியத் தகவலியல் மையத்தில் இந்த செயலியின் உருவாக்கமும் ஆராய்ச்சியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ALSO READ  ஸ்மார்ட் போனை சர்வீஸுக்கு கொடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
சோதனை கட்டத்தில்  இந்திய அரசின் ஜிம்ஸ் ஆப்.!

எனவேதான இந்திய அரசானது, மத்திய அரசு அலுவலகங்களிலும் மாநில அரசு அலுவலகங்களிலும் தங்களுக்குள் தகவல்கள் பரிமாற்றத்திற்கென இந்த ஜிம்ஸ் ஆப்பை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் வெளிநாட்டு செயலிகளால் ஏற்படும் தகவல் திருட்டு மற்றும் ஊடுருவலைத் தடுக்கமுடியும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இதிலும் வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்று எண்ட் டு எண்ட் என்கிர்ப்ஷன் முறையில்தான் தகவல்கள் பரிமாற்றப்படும். ஜமிஸ் செயலியைப் பயன்படுத்தி அலுவலகத்தில் பணிபுரிவோரிடம் தனிநபர் தகவல்களையும், குழு தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். இதனுடன் மேலதிகாரிகளுடன் பணி சம்பந்தமான ஆவணங்களையும் தகவல்களையும் பரிமாற்றிக்கொள்ள பிரத்யேக வசதியும் இதில் உள்ளது. பாதுகாப்பு பிரச்சனைகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை சாரமல் இருக்கவேண்டும் என்ற கருத்துகள் அடிப்படையாக வைத்து இந்த செயலி உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கதுதான் .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ATM கார்டு தொலைந்து விட்டதா?????இனி சுலபமாக உங்கள் மொபைலில் இருந்தே அதனை சரிசெய்யலாம்….

naveen santhakumar

நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார் அறிமுகம்

Admin

இந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்

Admin