தொழில்நுட்பம்

ஜியோவை பின்னுக்கு தள்ளியது ஏர்டெல் நிறுவனம்..!

ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவுள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது.

ட்ராய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோவை பின்னுக்கு தள்ளி ஏர்டெல் நிறுவனம் தொடர்ச்சியாக 4 மாத காலம் அதிக வாடிக்கையாளர்களை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களையும் பெற்றது.

அதனையடுத்து ஜியோ நிறுவனம் 19 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருந்தது. இந்த காலகட்டத்தில் வோடாபோன் நிறுவனம் தனது 29 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இருப்பினும் இந்திய டெலிகாம் சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட தொலை தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

Related posts

ஆன்லைன் திருட்டுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள “இரு மின்னஞ்சல்களை” பயன்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தல்:

naveen santhakumar

தண்ணீர் இல்லாத கழிவறையை அறிமுகப்படுத்திய பில்கேட்ஸ்

Admin

10 விநாடி வீடியோ அனுப்புங்க : ஜியோவின் பரிசை வெல்லுங்க

Admin