தொழில்நுட்பம்

ஜியோ ஃபைபர் புதிய டேட்டா வவுச்சர் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது அடுத்தகட்ட திட்டமாக, முன்னோட்ட பயனர்களைக் கட்டண பயனர்களாக மாற்றுவதற்கான ஏற்பாட்டினை தொடங்கியுள்ளது. இந்த நோக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது புதிய டேட்டா வவுச்சர்கள் வழங்கவுள்ளது. இந்த புதிய டேட்டா வவுச்சர்களின் கீழ் பயனர்களுக்கு 2000 ஜிபி வரை டேட்டா பயன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டேட்டா வவுச்சர்கள், டேட்டா டாப்-அப்பை போல் செயல்படும். அதாவது, மாதாந்திர டேட்டா வரம்பு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தீர்ந்துவிட்டால், இந்த டேட்டா வவுச்சர்களை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜியோ நிறுவனம் தனது டெலிகாம் டேட்டா வவுச்சர்களை போல, இந்த புதிய ஜியோபைபேர் டேட்டா வவுச்சர்கள் ரூ.101 ரூபாயிலிருந்து ரூ.4001 வரை கிடைக்கிறது.

குறைந்த டேட்டா அளவாக 20ஜிபி டேட்டாவில் துவங்கி அதிகபட்ச டேட்டா அளவாக சுமார் 2000ஜிபி டேட்டா வரை இந்த புதிய ஜியோபைபேர் டேட்டா வவுச்சர்களின் கீழ் வழங்கப்படுகிறது. ஜியோபைபேர் கட்டண சந்தாதாரர்கள் தனது மை ஜியோ ஆப் மூலம் அல்லது இணையத்தளத்தில் உள்ள ஜியோபைபேர் அக்கௌன்டை லாகின் செய்து ரிச்சார்ஜ் செய்துகொள்ளலாம். ஜியோபைபேர் டேட்டா வவுச்சர்கள் ஆறு விதமான கட்டணத்துடன், டேட்டா பயனை பயனர்களுக்கு வழங்குகிறது. அதிகபட்சமாக 2000ஜிபி, அதாவது, 2டிபி வரை டேட்டா பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

ALSO READ  உலகின் அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை சீனாவில் தொடக்கம்

ஜியோபைபேர் டேட்டா வவுச்சர் ரூ.1001 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு சுமார் 275ஜிபி வரையிலான டேட்டா சேவை வழங்கப்படுகிறது. ஜியோபைபேர் டேட்டா வவுச்சர் ரூ.2001 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 650ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிகப்படியான டேட்டா வழங்கும் திட்டமாக ரூ.4001 வவுச்சர் திட்டம் உள்ளது, இதன் மூலம் பயணிகளுக்கு 2000ஜிபி வரையிலான டேட்டா சேவை வழங்கப்படுகிறது. ஆனால் இந்த வவுச்சரின் கால அவகாசம் மாதாந்திர டேட்டா கால அவகாசத்துடன் முடிவடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோபைபேர் வவுச்சரில் உள்ள உங்களுடைய மீதம் உள்ள டேட்டாவை உங்களலால் வேலிடிட்டி முடிந்த பின் அடுத்த மாதத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முடியாது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜியோ தான் டாப்… மத்ததெல்லாம் வேஸ்ட்…எதுல தெரியுமா?

Admin

அமேசான் பிரைம் டே சேல் விரைவில் தொடக்கம் :

Shobika

வீரர் விராட் கோலி பயன்படுத்தும் புதிய போன் இந்தியாவில் அறிமுகம்

Admin