ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் ஐபோன் 11, ஐபோன் xr ஆகிய மாடல்களின் அசெம்ப்ளிங்கை தொடங்கியது. அதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், தனியார் பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட தகவலின் படி ஆப்பிள் நிறுவனம் தனக்கு தேவையான தயாரிப்புகளை சீனாவிற்கு வெளியே மாற்ற முடிவெடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதன்படி, ஐபோன் 12 சீரிஸ் மொபைல்களுக்கு தேவையான உபகரணங்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளது எனவும் வரும் காலாண்டில் வெளியாக உள்ள ஆப்பிள் ஐபோன் 12 மொபைல் மேட் இன் இந்தியா டேக்கில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.