தொழில்நுட்பம்

ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.34 ஆயிரம் வரை அதிரடியாக விலை உயர்த்திய மாருதி சுசூகி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாருதி சுசூகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 34 ஆயிரம் வரை விலை உயர்த்தப்படுகிறது.

ஆல்டோ, செலரியோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விப்ட், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது. மாருதி டூர் எஸ் மாடலின் விலையில் ரூ. 5061 உயர்த்தப்பட்டு இருக்கிறது. மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு ரூ. 7 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ஸ்விப்ட் மற்றும் எர்டிகா போன்ற மாடல்களுக்கு முறையே ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தப்படு இருக்கிறது. விட்டாரா பிரெஸ்ஸா, ஆல்டோ, டிசையர் மற்றும் வேகன் ஆர் போன்ற மாடல்களுக்கு முறையே ரூ. 10 ஆயிரம், 12,500, ரூ. 14 ஆயிரம் மற்றும் ரூ. 23 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது.
முன்னதாக டிசம்பர் 2020 மாதத்தில் மாருதி சுசூகி நிறுவனம் தனது விலையை உயர்த்துவதாக அறிவித்து இருந்தது. அதன்படி விலை உயர்வு தற்சமயம் அமலாகி இருக்கிறது.


Share
ALSO READ  பயனர்களின் சுயவிவரங்களை பகிரும் 'வாட்ஸ் ஆப்' ...! தப்பிப்பது எப்படி..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விரைவில் வெளியாகும் டாடா Altroz கார்

Admin

போலி செய்திகளை கண்டறியும் பணியில் இன்ஸ்டாகிராம்

Admin

சாம்சங் கேலக்சி போனுடன், சாம்சங் கேலக்சி பட்ஸ் லைவ் ஒயர்லெஸ் இயர்போன் அறிமுகம்:

naveen santhakumar