தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் அட்டகாசமான வசதிகளுடன் களமிறங்குகிறது மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், எட்ஜ் 20 மாடலில் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது.மோட்டோரோலா எட்ஜ் 20 மாடலில் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸரும், எட்ஜ் 20 பியூஷன் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 800U பிராசஸரும் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க இரு மாடல்களிலும் 108 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 2 MB டெப்த் சென்சார், எட்ஜ் 20 மாடலில் 8 MB டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 32 MB செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Moto One 5G announced: Motorola's latest budget 5G phone detailed

இரு மாடல்களிலும் 5G கனெக்டிவிட்டிக்கு பல்வேறு பேண்ட்கள், டூயல் 4G வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ எட்ஜ் 20 மாடல் 4000 MAH பேட்டரி, 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மோட்டோ எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 5000 MAH பேட்டரி மற்றும் 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ALSO READ  கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடும் பணி இன்று முதல் தொடக்கம் !
Moto G 5G Plus review - A Bargain from Motorola - Root Nation

மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மாடல் சைபர் டீல் மற்றும் எலெக்ட்ரிக் கிராபைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 GB + 128 GB மாடல் விலை ரூ. 21,499 என்றும் 8 GB + 128 மாடல் விலை ரூ. 22,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 மாடல் பிராஸ்டெட் எமரால்டு மற்றும் பிராஸ்டெட் பியல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 GB + 128 GB மாடல் விலை ரூ. 29,999 ஆகும். இதன் விற்பனை ஆகஸ்ட் 24-ம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி விற்பனை மையங்களில் துவங்குகிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மாடல் ஆகஸ்ட் 27-ம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கான்ட்ரா ஷூட்டிங் கேம் விரைவில்…..முன்பதிவு தொடக்கம்….!!!!

Shobika

குறைந்த விலையில் சாம்சங் இயர்பட்ஸ் அறிமுகம் :

Shobika

அசத்தலான முன்பதிவுடன் ஸ்கோடா கார் அறிமுகம் :

Shobika