தொழில்நுட்பம்

ஜியோ நிறுவனத்தின் அதிரடி சலுகை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் Jio Freedom Plans சலுகையை தனது பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. புது சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ், ஜியோ செயலிகளுக்கான சந்தா, தினமும் 100 SMS உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.

புது சலுகைகளின் துவக்க விலை ரூ. 127 ஆகும். மற்ற சலுகைகளில் தினசரி டேட்டா வழங்கப்படுவதை போன்று புது சலுகையில் தினசரி டேட்டா வழங்கப்படவில்லை. எனினும், இவற்றில் சலுகை முடியும் வரை குறிப்பிட்ட அளவு டேட்டா வழங்கப்படுகிறது. இதனை வேலிடிட்டி முடியும் வரை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 127 சலுகையில் மொத்தம் 12 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. ரூ. 247 ஜியோ சலுகையில் 25 ஜிபி டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.ஜியோ ரூ. 447 சலுகையில் 50 ஜிபி டேட்டா 60 நாட்களுக்கும், ரூ. 597 சலுகையில் 75 ஜிபி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியும், ரூ. 2397 சலுகை 365 ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.


Share
ALSO READ  ஜியோவில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்த அபுதாபி நிறுவனம்..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வருகிறது வாட்ஸ் அப்-பே….இனி வாட்ஸ் அப் வழியே பணபரிவர்த்தனை செய்து கொள்ளலாம்…..

naveen santhakumar

ஆண்ட்ராய்ட் போன்களில் ஸ்பாம்களை தவிர்க்க கூகுளின் புதிய வசதி…

Admin

உலகின் அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை சீனாவில் தொடக்கம்

Admin